தமிழ்நாடு
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு... என்ன காரணம்?
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு... என்ன காரணம்?
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இவர் சென்னை ஓட்டேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (செப்.,26) இரவு 11 மணியளவில் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
உடற்கூறு ஆய்விற்கு பிறகு தற்கொலைக்கான காரணம் குறித்து தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.