\
ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை: அப்போலோ அறிக்கை

ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை: அப்போலோ அறிக்கை

ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை: அப்போலோ அறிக்கை
Published on

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் சார்பில் நேற்று நடத்தப்பட்ட அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், இரவு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்போலோ வெளியிட்டுள்ள மருத்துவமனை அறிக்கையில், வலதுபக்க கால் தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற சிறிய அளவிலான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com