\
கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை!

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை!

கமல்ஹாசனுக்கு நாளை அறுவை சிகிச்சை!
Published on: 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு காலில் பொறுத்தப்பட்டிருந்த கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை நாளை நடைபெற இருக்கிறது.

இதுபற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொறுத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கானச் சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி வரும் 22 ஆம் தேதி (நாளை) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்குப் பின், கமல்ஹாசன் நம்மை சந்திப்பார்’ என்று கூறப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com