திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு: நீதிமன்றத்தின் நடவடிக்கையும், அடுத்தடுத்த நிகழ்வுகளும் - ஓர் பார்வை

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் மற்றும் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆகியோர் கூறிய கருத்துக்களை வீடியோவில் பார்க்கலாம்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்தது. அதன்படி, ”இவ்வழக்கிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை படித்தபின் 3 நாட்களாக தூங்கவில்லை” என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செம்மலை, “உயர்நீதிமன்ற நீதிபதி சரியான முடிவெடுத்துள்ளார்” எனக் கருத்த் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் மற்றும் வழக்கறிஞர் ராமசாமி மெய்யப்பன் ஆகியோர் கூறிய கருத்துக்களை வீடியோவில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com