\
வறட்சி பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு‌

வறட்சி பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு‌

வறட்சி பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு‌
Published on: 

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளி‌ல் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் வறட்சி பாதித்த பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றுவரும் ஆய்வின் தொடர்ச்சியாக இன்றைய தினம் திருவாரூர், கோவை, திருப்பூர்‌, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் இரும்பாவனம், சிங்கலாந்தி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாலையில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். புதுக்கோட்டையில் செங்காவிடுதி, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.

இதேபோல், கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திருப்பூர் மாவட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com