“சுர்ஜித் உடல் வெப்பநிலையை ரோபோ பதிவு செய்துள்ளது” - விஜய பாஸ்கர் விளக்கம் 

“சுர்ஜித் உடல் வெப்பநிலையை ரோபோ பதிவு செய்துள்ளது” - விஜய பாஸ்கர் விளக்கம் 
“சுர்ஜித் உடல் வெப்பநிலையை ரோபோ பதிவு செய்துள்ளது” - விஜய பாஸ்கர் விளக்கம் 

சுர்ஜித் மீட்பு பணிகள் எந்தளவுக்கு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 43 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 

இந்த மீட்டு பணிகளை அருகே இருந்து கவனித்து வருகிறார் அமைச்சர் விஜய பாஸ்கர். அவரது அர்ப்பணி குறித்து சமூக வலைத்தளங்களில் நேர்மறையான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சுர்ஜித் மீட்பு பணி குறித்து விஜய பாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், “சுர்ஜித்தை மீட்க 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பணியில் ஈடுபட்டு வருகிறது.  நிலத்தில் அதிர்வுகள் ஏற்படுவதை தடுக்க மிகுந்த கவனத்துடன் குழியை தோண்டி வருகிறோம். இதுவரை 6. 3 மீட்டர் தோண்டப்பட்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 20 அடி தோண்டியுள்ளனர்.  தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தி வருகிறோம். நேற்று முதல் குழந்தையின் கையில் அசைவு எதுவும் தெரியவில்லை. 

ரோபோ கேமிராவை உள்ளே செலுத்தி குழந்தையின் கையிலுள்ள வெப்ப அளவை பதிவு செய்துள்ளோம். கையில் வெப்பநிலை இருப்பதால் குழந்தை மயக்கத்தில் இருக்கலாம். மீட்பு பணிகள் எந்தளவுக்கு வேகமாக நடைபெற்று வருகின்றன என்பதை முதல்வர் கேட்டறிந்து வருகிறார்” என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com