இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கணித்தபடி இரண்டு இயந்திரங்களாலும் பள்ளம் தோண்ட முடியவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது  ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகத் திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில் நேற்று காலை முதல் இயந்திரங்கள் செயல்பட்டாலும், பாறைகள் குறுக்கீடு, மழை போன்ற காரணங்களால் தோண்டும் பணி காலதாமதமாகி வருகிறது. குழி தோண்டும் பணியை தொடக்கம் முதலே அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு வருகிறார். 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய அவர், கணித்தபடி இரண்டு இயந்திரங்களாலும் பள்ளம் தோண்ட முடியவில்லை. மணப்பாறை பகுதியில் பாறைகள் கடினமானதாக இருக்கின்றன. இவ்வளவு கடினமானப் பாறைகளை இதுவரை பார்த்தது இல்லை. ஒரு அங்குல அளவில் குழந்தையின் மேல் மண் விழுந்துள்ளது. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். இதுகுறித்து துணை முதல்வர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com