\
இதயம் நிறைந்த தொடர் நன்றிகள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இதயம் நிறைந்த தொடர் நன்றிகள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இதயம் நிறைந்த தொடர் நன்றிகள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

அத்தனை பணியாளர்களின் தியாகத்திற்கும் இதயம் நிறைந்த தொடர் நன்றிகள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

பரவி வரும் கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், காப்பாற்றவும் சுகாதார பணியாளர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். தன்னலம் காணாது கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுக்க வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்,

தன்னை மறந்து பிறர் நலம்காக்க
நேரம் அறியாமல்
சிரமங்களை
புன்னகையில் மறைத்துக் கொண்டு
உயிர்க்காக்கும்
உன்னதப் பணியில்
உழைக்கும்
மருத்துவர்கள் செவிலியர்கள்
மற்றும் துறை சார்ந்த
அத்தனை பணியாளர்களின் தியாகத்திற்கும்
இதயம் நிறைந்த தொடர் நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com