மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை: விஜய பாஸ்கர்

மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை: விஜய பாஸ்கர்

மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை: விஜய பாஸ்கர்
Published on

மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்றும் குட்கா மற்றும் பான்சாலா விவகாரத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து அவர், விடுத்துள்ள அறிக்கையில், 2017 ஏப்ரல் வரை 544 டன்னுக்கு அதிகமான குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிகப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். குட்கா மற்றும் பான் மசாலா மீதான தடையாணை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களில் குறிப்பிடப்படும் மாதவ்ராவ் என்ற நபரை தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தித்‌தது இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தனக்கு பிடிக்காத சிலர் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி தன்னை அழித்துவிடலாம் என மனப்பால் குடிப்பதாக அவர் கூறியுள்ளார். தனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை எனவும் இந்த பிரச்னைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com