தமிழ்நாடு
யாருக்கும் அடங்காத அமைச்சரின் ’கொம்பன்’ வாடிவாசலில் முட்டி உயிரிழப்பு
யாருக்கும் அடங்காத அமைச்சரின் ’கொம்பன்’ வாடிவாசலில் முட்டி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை கொம்பன், வாடிவாசலில் நடப்பட்டிருந்த கல்தூணில் முட்டி உயிரிழந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை கொம்பன், வாடிவாசல் கல்தூணில் முட்டி மயக்கமடைந்தது. மாட்டை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் மாடு இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அந்த மாட்டை அமைச்சரின் தோட்டத்து வீட்டில் அடக்கம் செய்தனர். இது வரை கொம்பன் மாடு எந்த ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அலங்காநல்லூரில் கடைசி வரை அடக்க முடியாத காளையாக வலம் வந்த கொம்பன் மாட்டுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டிருந்தன.