\
“விவேக் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்; குணமடைய எனது பிரார்த்தனை!” - அமைச்சர் விஜயபாஸ்கர்

“விவேக் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்; குணமடைய எனது பிரார்த்தனை!” - அமைச்சர் விஜயபாஸ்கர்

“விவேக் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்; குணமடைய எனது பிரார்த்தனை!” - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கேட்டறிந்தார்.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகள் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவேக் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவனை நிர்வாகத்திடம் அவரது உடல்நிலைக் குறித்து கேட்டறிந்த தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி என்பது அதிர்ச்சியளிக்கிறது. சிம்ஸ் மருத்துவமனை இயக்குநர்களுடன் பேசினேன். அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர் குழுவுடன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக் குறித்து பேசி வருகிறேன். விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com