“நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களின் எஜமானர்களை விரட்டுவோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

“எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது, சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை அடித்து விரட்டினோமே, அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம்” என அமைச்சர் உதயநிதி பேசினார்.
udhayanithi
udhayanithiகோப்புப்படம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்...

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்PT Web

“எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது, ஒரு கிளை செயலாளரை கூட தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு கலைஞர் நம்மை உருவாக்கியுள்ளார். அதன்படியே தற்போதைய தலைவரும் செயல்பட்டு வருகிறார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டம்தோறும் மாரத்தான் போட்டி, பேச்சு போட்டி நடத்த இளைஞரணி முடிவு செய்துள்ளது.

இளைஞரணியின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டை மிகச் சிறப்பாக, இதுவரை நடக்காத வகையில் நடத்திக் காட்டுவோம். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய திட்டம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைபுதிய தலைமுறை

எப்படி சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை எல்லாம் அடித்து விரட்டினோமோ அதே போல வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம்” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com