“ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது” – அமைச்சர் உதயநிதி பேச்சு

2021 தேர்தலில் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பியது போல 2024 தேர்தலில் அடிமைகளின் முதலாளிகளை வீட்டிற்கு அனுப்புவதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ட்விட்டர்

செய்தியாளர்: சுகன்யா

சென்னை கிழக்கு மாவட்ட திமுக பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மேயர் பிரியா, எம்பி தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அங்கு அமைச்சர் உதயநிதி பேசிய போது... “40 தொகுதிகளிலும் கலைஞர்தான் போட்டியிடுகிறார் என்ற எண்ணத்தோடு நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒன்றிய பாஜகவை ஏன் விரட்டியடிக்க வேண்டும் என வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்ல வேண்டும். ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. திமுக முடிவு செய்பவர்தான் ஒன்றிய பிரதமர் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

ஆளும் கட்சியாக பொறுப்புக்கு வந்த பின்னர் சந்திக்கும் நாடாளுமன்ற தேர்தல் இது. 2024 தேர்தல் முடிவுகள் 2026 தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும். எனவே 40 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற வேண்டும்.

அப்போதுதான் தமிழ்நாடு உரிமைகளை கேட்டுப் பெற முடியும். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 ஜெயிப்பது உறுதி. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் கூட்டணி கட்சிகளை சந்தித்து பேசி உரிய தொகுதிகளை ஒதுக்குவார்கள்.

cm stalin
cm stalinpt desk

இபிஎஸ் சிறைக்கு செல்வார் என ஓபிஎஸ் சொல்கிறார். ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் என இபிஎஸ் சொல்கிறார். நான் சொல்கிறேன், ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே கைதாகப் போகின்றனர். ஆனால், சிறைக்கு செல்லும் போது தவழ்ந்து தவழ்ந்து செல்லாதீர்கள்” என விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com