Minister Udhayanidhipt desk
தமிழ்நாடு
EXCLUSIVE | “இயற்கையை எப்படி சரியாக கணிக்க முடியும்? நாளை காலை..!” - களத்திலிருந்து அமைச்சர் உதயநிதி
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை ஆய்வு செய்துவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நமது செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலை காணலாம்
சென்னையில் தற்போது மழை குறைந்துள்ளது. இந்நிலையில் களப்பணியில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், “சென்னை மீள ஒரு நாள் தேவைப்படும். இந்தளவுக்கு மழையை எதிர்பார்க்கவில்லை. இயற்கையை எப்படி கணிக்க முடியும்? 2015-ஐ விட ஒன்றரை மடங்கு அதிக மழை, அதுவும் 24 மணி நேரமாக தொடர்ந்து பெய்துள்ளது. மீட்பு பணிகளை அனைவரும் வேகமாக செய்துவருகிறோம்.
இன்னும் 2, 3 மணி நேரத்தில் மழை முழுவதுமாக நின்றுவிடுமென எதிர்பார்க்கிறோம். முகாம்களில் உள்ளோருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுத்துவருகிறோம். நாளை காலை சகஜ நிலைக்கு வந்துவிடும். ஒருநாளில் மழை முழுவதும் வடிந்துவிடுமென எதிர்பார்க்கிறோம்” என்றார்.