‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’ | இன்று தாக்கலாகிறது தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024 - 25

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், அதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக பட்ஜெட் - ‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’
தமிழக பட்ஜெட் - ‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’புதிய தலைமுறை

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களை ஈர்க்கும் வகையிலான திட்டங்கள் அறிவிக்கப்படுமா என மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவியேற்ற பின் அவர் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இதுவாகும்.

இந்நிலையில் "மாபெரும் 7 தமிழ்க்கனவு“ என்ற தலைப்பில், பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை வெளியிட்டு, எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது தமிழக அரசு. அதில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய்த் தமிழும், தமிழர் பண்பாடும் ஆகிய 7 அம்சங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பட்ஜெட் - ‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான ஒதுக்கீட்டில் கை சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டி?

எனவே இந்த 7 அம்சங்களுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மகளிருக்கு பயன்தரும் வேறு பிற திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதேபோல் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும் தமிழக அரசு அண்மைக்காலமாக தனி கவனம் செலுத்தி வருகிறது. செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.

தமிழக பட்ஜெட் - ‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’
இன்றைய தலைப்புச் செய்திகள் - தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை முதல் தமிழக வெற்றிக்கழக ஆலோசனை கூட்டம் வரை

தமிழகத்தை விளையாட்டு நகரமாக மாற்றுவதே நோக்கம் என அரசு அறிவித்துள்ளதால், இளைஞர் நலனுக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம். இவை தவிர தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அம்சங்களுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com