மின் கட்டணம் குறித்து ஸ்டாலின் மக்களை குழப்புகிறார்: அமைச்சர் தங்கமணி விளக்கம்
மின் கணக்கீடு விவகாரத்தில் குளறுபடி நடப்பதாக ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.
பல்வேறு இடங்களில் மின் கட்டணம் அதிகம் வசூலிப்பதாக புகார் எழுந்து உள்ளது என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் நாளை அதிக மின் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் மின்கட்டணத்தில் எந்த குளறுபடியும் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஸ்டாலின் கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை. மக்களை திசை திருப்பும் வேலையில் ஸ்டாலின் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. மின்சார ரீடிங் எடுத்ததில் குளறுபடி என ஸ்டாலின் மக்களை குழப்புகிறார். கொரோனா நோய் பரவலைத் தடுக்கவே மின் பணியாளர்கள் ரீடிங் எடுக்க வரவில்லை. வீட்டு மின் நுகர்வோர் இன் தற்போதைய மின் கட்டணம் அதன் உற்பத்தி செலவை விட மிக மிக குறைவு. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் மின் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது.
தவறான அடிப்படையில் கணக்கீடு மின்வாரியத்திற்கு லாபம் என ஸ்டாலின் கூறுவதில் உண்மை இல்லை" என தெரிவித்துள்ளார்.