பரந்தூர் விமான நிலைய விவகாரம்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்கள் Vs அமைச்சர் உரை!

பரந்தூர் விமான நிலைய விவகாரம்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்கள் Vs அமைச்சர் உரை!
பரந்தூர் விமான நிலைய விவகாரம்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்கள் Vs அமைச்சர் உரை!

புதிய விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ''பரந்தூர் விமான நிலையம் அந்த பகுதியில் மக்கள் விவசாய நிலம் பாதிப்பு என அச்சப்படுகின்றனர். கால்நடை, விவசாயம் செய்து வருகின்றனர். 13 கிராம மக்கள் போராடி வருகின்றனர். வேறு இடம் கடந்த திமுக ஆட்சியில் தேர்வு செய்தனர். விவசாய நிலம், வீடுகள் பாதிக்காமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டம் அவசியம் தான். மாற்று இடம் பரிசீலிக்க வேண்டும்'' என்றார்.

பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், ''அரசின் சார்பில் போராட்ட குழுவுடன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட கூடாது என்பதற்காக அன்புமணி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சூழலில் தமிழ்நாட்டிற்கு சென்னைக்கு அடுத்து பசுமை விமான நிலையம் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை, விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அரசு மிக கவனம் செலுத்தி விமான நிலையம் அமைக்கும் பணியில் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை பேசுகையில், ''அந்த பகுதி மக்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். முதலமைச்சரை முழுமையாக நம்புகிறோம். அந்த பகுதி மக்கள் பாதிக்கக் கூடாது. அதேபோல் அடுத்த தலைமுறை மக்கள் பயன் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறேன்'' என்றார்.

இதற்கு விளக்கம் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ''தமிழகத்தின் வளர்ச்சி அடிப்படையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அவசியம். சட்டப்பேரவை 3 வது நாள் நிகழ்வில் கேள்வி நேர முடிவின் போது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக பேசப்பட்டது. இதில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை, பா.ம.க ஜி.கே.மணி மற்றும் தமிழக வாவ்வுரிமை கட்சி வேல்முருகன், விசிக மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது.

விமான பயணிகளை கையாளுவதில் தமிழகம் 5 இடத்தில் இருந்து வருகிறது. பொருளாதார தேவை மற்றும் சரக்குகளை கையாளுவதில் 7 சதவீதம் இருக்கிறோம். ஒட்டு மொத்த பொருளாதாரம் நிலை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்தார். ஒரு விமான நிலையம் அமைக்க 8 வருடம் ஆகும். புதிய விமான நிலையம் அவசியமாக இருக்கிறது. இடங்களை தேர்வு செய்வதில் இறுதியாக 4 இடத்தை இறுதி செய்து பரந்தூர் இடத்தை இறுதி செய்தோம். மேலும் கிராம மக்களின் வாழ்வாதரம் காக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. இதை முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று விவாதித்தோம். அந்த கிராம மக்களுடன் பேசினோம். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். நீர் நிலைகள் பாதிக்காமல் இருக்க குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: ”இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஏன்?” - முதல்வரின் விளக்கமும்.. தலைவர்களின் உரையும்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com