சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
Published on

சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் மற்றும் தமிழ் பண்பாட்டுதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதுகுறித்து தங்கம் தென்னரசு கூறுகையில், “சென்னை - கோவைக்கு இணையாக மதுரை - தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை மேம்படுத்த தொழில் துறை திட்டமிட்டுள்ளது. மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டு வர தொழில் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக மதுரையை மையமாக கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவனங்களை உள்ளடக்கிய மன்றமான போரம் (Forum) அமைத்து தொழில் சாத்தியக்கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டமிட்டு வரப்படுகிறது.

மேலும் சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் துவங்க அளிக்கப்படும் அதே சலுகைகளை தென்னக பகுதிகளில் குறைந்த முதலீட்டில் தொழில் துவங்கினாலும் அந்த நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளது. கடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், “ஜூலை 15 ம் தேதிக்கு பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுக்கப்படும். நாளை முதல் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி கொற்கை, சிவகங்கை, ஆதிச்ச நல்லூர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய்ய உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com