நீரிழிவு, ரத்த அழுத்தத்தை கண்டறிய வீடு தேடிச்சென்று மருத்துவ சோதனை: மா.சுப்பிரமணியன்

 நீரிழிவு, ரத்த அழுத்தத்தை கண்டறிய வீடு தேடிச்சென்று மருத்துவ சோதனை: மா.சுப்பிரமணியன்
 நீரிழிவு, ரத்த அழுத்தத்தை கண்டறிய வீடு தேடிச்சென்று மருத்துவ சோதனை: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றின் தாக்கத்தை கண்டறிய வீடுவீடாகச் சென்று பரிசோதிக்கும் 'மெகா ஸ்கிரீனிங்' திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை அதிகாரிகளுடன் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தோர், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்றவற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறிய மா.சுப்பிரமணியன், இந்த நிலையை மாற்ற வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கும் திட்டம் 15 நாள்களில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com