தண்ணீர் சிக்கனம் வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தண்ணீர் சிக்கனம் வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தண்ணீர் சிக்கனம் வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
Published on

மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வறட்சியை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, தமிழகத்தில் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறையை போக்க 923 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை‌ நிரந்தரமாக தீர்க்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். கடும் வறட்சி நிலவுவதால் மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com