நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
வடகிழக்கு பருவமழையின் கீழ் மழை பெய்தாலும், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவே மழை பெய்ததால் ஏரிகளில் குறைவான அளவு நீரே சேகரிக்கப்பட்டு உள்ளதாக உள்ளாட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் கடந்த 30-ம் தேதி முதல் இன்றுவரை 43.75 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருப்பதாக தெரிவித்தார். 315-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில் அவற்றில் பெரும்பாலான இடங்களில் நீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். மிகவும் தாழ்வான 115 இடங்களில் மட்டும் மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீரிருப்பு குறைவாகவே உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவே மழை பெய்ததால் ஏரிகளில் குறைவான அளவு நீரே சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.