தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி, தற்போது எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.