தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகு மூலம் ஆவின் பால் வினியோகம்- அமைச்சர் சா.மு.நாசர்

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகு மூலம் ஆவின் பால் வினியோகம்- அமைச்சர் சா.மு.நாசர்
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் படகு மூலம் ஆவின் பால் வினியோகம்- அமைச்சர் சா.மு.நாசர்
'சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 லட்சத்து 20 ஆயிரம் ஆவின் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல் தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும்' எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் நாசர்.
தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி ஆகியோர் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் ஆலையில், நேரில் சென்று பால் விநியோகப் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு.நாசர், ''தமிழகம் முழுவதும் பெய்து வரும் வட கிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகம் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அம்பத்தூர் சோழிங்கநல்லூர் மாதவரம் காக்களூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதி உள்ள ஆவின் தொழிற்சாலைகள் 24 மணி நேரமும் செயல்பட்டு முறையாக பால் கொள்முதல் செய்யப்பட்டு அதை பதனிட்டு வினியோகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கடந்த முறை ஆட்சியாளர்களின் கவனக்குறைவால் பால் லிட்டருக்கு 200 ரூபாய் வரை விற்பனை நடைபெற்றது. இந்த முறை அது போன்ற நிலை மக்களுக்கு ஏற்படாது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 லட்சத்து 20 ஆயிரம் ஆவின் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல் தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும். அதேபோல் 6 லட்சத்து 10 ஆயிரம் சில்லறை வணிகர்களும், 126 வாகனங்களில் 2,000 சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக தங்கு தடையின்றி ஆவின்பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்கி உள்ள தாழ்வான பகுதிகளில் படகுகள் மூலம் சென்று ஆவின் பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com