புழல் சிறையில் ‘கைதி எண் 1440’ அமைச்சர் செந்தில்பாலாஜி!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் விசாரணை சிறைவாசி எண், 001440 என்று கூறப்பட்டுள்ளது. அவர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜிபுதிய தலைமுறை

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம். இதனால் அவரது சிறை தண்டனை உறுதியான நிலையில், அவருக்கு விசாரணை சிறைவாசி எண் 1440 என்பது ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 13-ம் தேதி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் இல்லம், அலுவலகம், செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு அலுவலகம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் ஜூன் 14 அதிகாலையில் (2.30 மணியளவில்) அவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிகோப்பு புகைப்படம்

அப்போது திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், இதயத்தில் மூன்று அடைப்பு இருப்பதாகவும் உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யவேண்டும் எனவும் மருத்துவர்கள் சொல்வதாக தகவல் வந்தது. அதன்படி செய்யப்பட்டு, அவருக்கு இதய அடைப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு பைபாஸ் சர்ஜரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
எப்படி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி? மருத்துவமனை கள நிலவரம் சொல்வதென்ன?

இதற்கிடையில் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதையொட்டி மருத்துவமனைக்கு சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு அவருக்கு கைது வாரண்ட்டை அளித்தார். அதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் ‘கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று தொடரப்பட்ட இம்மனுவின் மீதான விசாரனை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, “செந்தில் பாலாஜியின் மனுவானது நிலைக்கதக்கது கிடையாது. ஆகவே இது தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றார். மேலும் “அமலாக்கதுறையின் நடவடிக்கையினால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் இருப்பார்” எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையொட்டி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் விசாரணை சிறைவாசி எண் வெளியாகியுள்ளது. அதன்படி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, புழல் சிறையில் விசாரணைக் கைதிக்கான பதிவேடு எண் 001440 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு கேட்டுள்ள இடைக்கால ஜாமீன் வழக்கு, இன்று மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்ற காவல், ஆட்கொணர்வு தொடர்பான மனுக்களும் இன்று விசாரிக்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com