சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவரின் அலுவலகத்தில் சோதனை

சென்னை வளசரவாக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபர் ஒருவரின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
Senthil balaji
Senthil balajiFile image

சென்னை வளசரவாக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபர் ஒருவரின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Minister Senthil Balaji
Minister Senthil Balajipt desk

சென்னை வளசரவாக்கம் மருதம் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கரூரை சேர்ந்த ஜெயராமன் மற்றும் அவர்களது இரு நண்பர்கள் இணைந்து சினிமா தயாரிப்பு நிறுவனம் என்று சொல்லி கீழ்தளத்தில் உள்ள அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர். அங்கு அவசர அவசரமாக பூசு வேலையையும் செய்துள்ளனர். இவர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபரென்று சொல்லப்படுகிறது.

நேற்று காலையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில், நேற்று மாலை 5.30 மணி அளவில் ஜெயராமின் குடியிருப்பிலும் சோதனை நடந்துள்ளது. ஒரு இனோவா காரில் இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் ஜெயராமின் குடியிருப்புக்கு சென்ற இரண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் பின்னணியில் ‘சென்னையை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட பார்களில் இருந்து எடுத்து வரப்படும் பணம் இந்த அலுவலகத்தில் இருந்து எண்ணப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுவதாக எங்களுக்கு புகார் கிடைத்தது. அதையடுத்து சோதனை செய்தோம்’ என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று மாலை 5:30 மணிக்கு மேல் சென்ற வருமான வரித்துறையினர் சுமார் 2 மணி நேரம் சோதனைக்கு பின் சில ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com