தமிழ்நாடு
மின்வெட்டு இருப்பதாக தவறான சித்தரிப்பை உருவாக்க முயற்சி- அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்வெட்டு இருப்பதாக தவறான சித்தரிப்பை உருவாக்க முயற்சி- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் மின்வெட்டு இருப்பதாக தவறான சித்தரிப்பை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மின்வெட்டு என்ற நிலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மேலும் கூறுகையில், மாதாந்திர பராமரிப்புக்காகவே மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்றும் 6,800 மின்மாற்றிகளை மாற்றும் பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும் மின்கட்டணம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. மின் கட்டணத்தில் ஏதாவது தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.