மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை எப்போது துவங்கும்? - அமைச்சர் விளக்கம்

மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை எப்போது துவங்கும்? - அமைச்சர் விளக்கம்

மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை எப்போது துவங்கும்? - அமைச்சர் விளக்கம்
Published on

வீடுகளில் மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்படவுள்ளது என்றும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமுல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் மின் ஊழியர்கள் சங்கத்தினை சார்ந்தவர்கள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர்கள் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 100 யூனிட்க்கு மேல் 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு அரசிற்கு ரூ.3496 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுவதாகவும் கூறினார்.

மேலும்,100 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை வேண்டாம் என்று வீட்டாளர்கள் விரும்பினால், கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி ரூ.1200 கோடியில் நடைப்பெற்று வருகிறது என்றும், பருவ மழைக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு, தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வீடுகளில் மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மீட்டர்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதிசெய்தப்பின், வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நிலக்கரி தற்போது 143 டாலருக்கு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை உயர்த்தி 203 டாலருக்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், குறைந்தபட்சம் 10% நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்து கட்டாயம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com