காஜாநஜீர் - செஞ்சி மஸ்தான்PT Desk
தமிழ்நாடு
திமுகவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சகோதரரின் பதவி பறிப்பு!
திமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி பேரூர் செயலாளராக உள்ள காஜாநஜீர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்.கார்த்தி செஞ்சி பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திமுக வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகிப்பவர் அமைச்சர் செஞ்சி மஸ்தான். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனத்தைச் சேர்ந்த மருவூர் ராஜா என்கின்ற சாராய வியாபாரியுடன் அமைச்சர் மஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பின.
திண்டிவனம்: திமுக வார்டு கவுன்சிலரின் கணவரும், பிரபல சாராய வியாபாரியுமான மருவூர் ராஜா மீண்டும் கைது!
செஞ்சி மஸ்தான்
அதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தானின் குடும்ப உறுப்பினர்களே கட்சிப் பதவிகளில் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் திமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி பேரூர் செயலாளராக உள்ள காஜாநஜீரின் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்.கார்த்தி செஞ்சி பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நஜீர் & கார்த்திPT Tesk
காஜாநஜீர் அமைச்சர் செஞ்சி மஸ்தல்தானின் உடன்பிறந்த சகோதரர் (தம்பி) என்பது குறிப்பிடத்தக்கது