இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களால், இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி மையங்கள் தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “டிசம்பர் மாத இறுதிக்குள் 100 பயிற்சி மையங்களை அரசு தொடங்கும். அதற்குப் பிறகு 412 மையங்களிலேயே மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது இந்தியாவிலேயே வரலாற்றை படைக்கும் அளவிற்கு உருவாக்கப்படவுள்ளது. இணையதளம் மூலமாக 73,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது இந்தியாவே தமிழகத்தை திரும்பிப் பார்க்கப் போகிறது” என்று கூறினார்.
மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருப்பதாகவும் செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.