தமிழ்நாடு
மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்: செங்கோட்டையன் அறிவிப்பு
மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்: செங்கோட்டையன் அறிவிப்பு
மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வெள்ளத்தால் மாணவர்களின் புத்தகங்கள் எங்கெல்லாம் சேதமடைந்துள்ளதோ அங்கெல்லாம் மாற்றுப் புத்தகங்கள் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும். அரசுப்பள்ளிகளில் பயன்படுத்த முடியாத நிலையில் சில கட்டங்கள் உள்ளன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு உள்ள கட்டடங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதற்காக முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் கட்டட பொறியாளர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சேதமடைந்த கட்டங்கள் விரைவில் கண்டறியப்பட்டு அகற்றப்படும்.” என்று கூறினார்.