“தரையில் அமர்ந்து படித்து அமைச்சரானோம்” - மாணவர்கள் மத்தியில் செல்லூர் ராஜூ பேச்சு

“தரையில் அமர்ந்து படித்து அமைச்சரானோம்” - மாணவர்கள் மத்தியில் செல்லூர் ராஜூ பேச்சு

“தரையில் அமர்ந்து படித்து அமைச்சரானோம்” - மாணவர்கள் மத்தியில் செல்லூர் ராஜூ பேச்சு
Published on

தரையில் அமர்ந்து படித்து தற்போது நாங்கள் அமைச்சராகி உள்ளோம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது “நாங்கள் படிக்கும் காலத்தில் தரையில் அமர்ந்துதான் படித்தோம். ஆனால் தற்போது மேசைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தரையில் அமர்ந்து படித்துதான் தற்போது நாங்கள் அமைச்சராகி உள்ளோம். நீங்களும் இதேபோன்ற உயர் பதவிக்கு வரவேண்டும்” எனப் பேசினார்.

மேலும், “மாணவன் நினைத்தால் எதனையும் நடத்திக் காட்டலாம். முடித்துக் காட்டலாம். ஜெயித்துக் காட்டலாம். வளமான சமுதாயத்தை உருவாக்கக்கூடிய அறிவாளிகள் மாணவர்கள். வெறும் படிப்பாற்றல் மட்டும் மாணவர்களுக்கு பயன்படாது. பேச்சாற்றல், எழுத்தாற்றல், அரசியல் ஆகியவற்றையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.


இதுநாள் வரை கேரளாதான் கல்வியில் முதலிடம் என்று இருந்ததை தமிழக அரசு மாற்றிக் காட்டியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் பள்ளிக் கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி அறிவு பெற்றவர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com