\
செல்லூர் ராஜுவின் தாயார் மரணம்

செல்லூர் ராஜுவின் தாயார் மரணம்

செல்லூர் ராஜுவின் தாயார் மரணம்
Published on: 

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். 

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. ஒச்சம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 ‌மணியளவில் ஒச்சம்மாள் உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து அவரது உடல் செல்லூரில் உள்ள அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் கட்சியினரின் அஞ்‌லிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை மதியத்திற்குப் பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com