தமிழ்நாடு
டெங்கு ஒழிப்பு பணிகளை சிறப்பாக செய்வோம்: செல்லூர் ராஜூ
டெங்கு ஒழிப்பு பணிகளை சிறப்பாக செய்வோம்: செல்லூர் ராஜூ
டெங்கு ஒழிப்பு பணிகளை சிறப்பாக செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் பேசும்போது அமைச்சர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் போதும் டெங்கு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி அதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும். முழுமையாக டெங்குவே இல்லாத மாவட்டமாக ஒவ்வொரு மாவட்டத்தையும் உருவாக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் அந்தப் பணியை இன்று காலை தொடங்கியுள்ளோம். அதனை சிறப்பாக மேற்கொள்வோம்” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.