தெர்மாகோல் திட்டத்திற்காக பாராட்டுகின்றனர்: செல்லூர் ராஜூ

தெர்மாகோல் திட்டத்திற்காக பாராட்டுகின்றனர்: செல்லூர் ராஜூ

தெர்மாகோல் திட்டத்திற்காக பாராட்டுகின்றனர்: செல்லூர் ராஜூ
Published on

நீர் ஆவியாதலைத் தடுக்க மேற்கொள்ளபட்ட தெர்மாகோல் திட்டம், ஒரு முன்னோடியான திட்டம் என சிலர் தம்மை பாராட்டுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வருங்காலத்தில் நீர் ஆவியாதலைத் தடுக்க கண்டிப்பாக ஒரு முன்னோடியான திட்டம் தேவைப்படும். அந்தவகையில் தெர்மாகோல் திட்டம் ஒரு முன்னோடியான திட்டம் என சிலர் என்னை பாராட்டுகின்றனர். ஒரு சிலர் விமர்சனம் செய்கின்றனர். பொதுவாக எந்தஒரு திட்டத்தையும் அமைச்சர்கள் தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து போய் செயல்படுத்துவதில்லை. இதனை வலைத்தள விமர்சகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com