“நாங்கள் ஒட்டுமொத்த சனாதனத்தையும் எதிர்க்கவில்லை”- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

“என் மண் என் மக்கள் பயணம் படுதோல்வி அடைந்ததால் குழம்பி போயிருக்கிறார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை” - அமைச்சர் சேகர் பாபு

பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “நாங்கள் ஒட்டுமொத்த சனாதனத்தையும் எதிர்க்கவில்லை; அதில் உள்ள குலக்கல்வி, தீண்டாமை, பெண் அடிமை உள்ளிட்ட கொள்ளைகளைதான் எதிர்க்கிறோம். என் மண் என் மக்கள் பயணம் படுதோல்வி அடைந்ததால் குழம்பிபோயிருக்கிறார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. தமிழ்நாட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் சனாதனத்தை பேசி திசைதிருப்புகிறார் .

சேகர்பாபு, அண்ணாமலை
காணாமல் போன மணிப்பூர்- சிஏஜி விவகாரம்; முன்னிலைக்கு வந்த சனாதனம்-பாரத் சர்ச்சை.. மாறும் விவாதங்கள்!

நாங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் ஏற்போம். எந்த இடத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில், இறை நம்பிக்கைக்கு எதிராகவும் முதலமைச்சர் பேசியுள்ளார் என்பதை அண்ணாமலை போன்றவர்கள் கூற வேண்டும்” என்றார்.

மேலும் “தமிழ்நாட்டில் அனைவருக்கும் பொதுவான சமத்துவ ஆட்சி நடைபெறுகிறது. இந்து மதத்தை வரவேற்கும் இயக்கம் திமுக. இறை நம்பிக்கை உள்ளவர்களையும் ஆதரிப்போம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com