அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபுpt desk

“அல்லாவும் காப்பாற்றப்படுவார்... முருகரும் காப்பாற்றப்படுவார்” - அமைச்சர் சேகர்பாபு

“திருப்பரங்குன்றம் மலைக்கோயில் விவகாரத்தில் அல்லாவும் காப்பாற்றப்படுவார், முருகனும் காப்பாற்றப்படுவார்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 7, 88வது வார்டு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக் குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களது குறைகளை நேற்று கேட்டறிந்தனர்.

sekar babu inspection
சேகர் பாபு ஆய்வுஎக்ஸ் தளம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்... “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இதுவரை 2,065 கோயில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. வருகிற 2ம் தேதி 67 கோயில்களிலும், 3 ம் தேதி 27 கோயில்களிலும் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறும்.

அமைச்சர் சேகர்பாபு
”பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்காத யாரையும் நம்பாதேயென்று அப்போதே சொன்னவர் பழனிபாபா”- திருமா பேச்சு

திராவிட மாடல் ஆட்சிதான் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய ஆட்சியாக உள்ளது. திருப்பரங்குன்றம் மலை கோயில் வழிப்பாட்டு விவகாரத்தில் திராவிட மாடல் அரசு எல்லோருக்கும் எல்லாமுமான அரசு. எந்தெந்த வழிபாட்டு நெறிமுறைகள் இருந்ததோ அது தொடரும். மதம், இனம், மொழியால் மக்களை பிளவு படுத்த முளைக்கும் சக்திகளை முதல்வர் ஒடுக்குவார். இந்த விவகாரத்தில் அல்லாவும் காப்பாற்றப்படுவார் , முருகரும் காப்பாற்றப்படுவார்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com