\
வரும் 4, 5 தேதிகளில் கனமழை பெய்யும், மக்கள் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் சம்பத்

வரும் 4, 5 தேதிகளில் கனமழை பெய்யும், மக்கள் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் சம்பத்

வரும் 4, 5 தேதிகளில் கனமழை பெய்யும், மக்கள் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் சம்பத்
Published on: 

வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்பதால், அப்போது மக்கள் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆங்காங்கே இன்று கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாளை தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. எனினும் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் சம்பத் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை நேரங்களின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் புயல் ஓயும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com