75 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி

75 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி
75 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கமணி

புயல் பாதித்த மாவட்டங்களில் நகர் பகுதிகளுக்கு 75% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நாகை - வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடந்தது. இதனால் நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. மேலும் பலரும் தமது வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். 

தென்னை, வாழை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல மின்கம்பங்களும் சாய்ந்து ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் நாகை உள்ளிட்ட புயல் பாதிப்பு மாவங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் அதில் மெழுகுவர்த்திகளும், தீப்பெட்டிகளும் அதிகமாக அனுப்பப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில் நகர் பகுதிகளுக்கு 75% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரக பகுதிகளுக்கு ஒரு வாரத்திற்குள் மின்சாரம் வழங்கப்படும் எனவும் மின் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் மின்வெட்டை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com