பொது மொழி என்ற பேச்சு தேவையே இல்லை - ராஜேந்திர பாலாஜி
பொது மொழி என்ற பேச்சு தேவையே இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மதுரையில் புதிய தலைமுறையிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழ் மக்கள் தமிழ் மொழியைத் தான் விரும்புகிறார்கள். தமிழை உரிமையோட கொண்டாட வேண்டும் என்ற உணர்வு எனக்கும் உண்டு. பொது மொழி என்ற பேச்சு தேவையே இல்லை. இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் தான் பிரச்னை வராது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கு நல்லது என்றாலும், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அதைக் கொண்டுவர முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். மேலும், “பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது. இந்தியை திணித்தால் தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் ஏற்க மாட்டார்கள். இந்தி திணிப்பை வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏற்க மாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.