
கோயம்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றத்தை கொச்சையாக பேசியதாக வீடியோ வெளிவந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ ராஜ ஒரு நல்ல மருத்துவரை பார்ப்பது சரியாக இருக்கும், இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவரது பதவிக்கான தகுதியை இழந்து விடுவார்” என்றார்.
ரெய்டு நடத்தப்படும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு கட்சி என்பது வேறு, வழக்கு என்பது வேறு , HM என்றால் Head Master ஆக இருக்கலாமே, Health Minister என மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏன் ? என கேள்வி எழுப்பினார்.
Read Also -> தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக பேசிய அவர் “மனிதர்கள் அல்லாதவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதையே பெரியார் சிலை அவமதிப்பு நிகழ்வு காட்டுகிறது ; ஹெச் ராஜா ஒட்டுமொத்த காவலர்களையும் , நீதிமன்றத்தையும் அவமதித்தது தவறு என்றார். மேலும் அதிமுக அமைக்கும் கூட்டணியே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
Read Also -> சசிகலா ஒரு இடைச்செருகல் - அதிமுக எம்பி வைத்திலிங்கம்
தமிழகத்தில் யாரும் கலப்படமான பாலை விற்பனை செய்கிறார்களா என்பது குறித்து அரசு சார்பில் மறைமுகமான சோதனை நடைபெற்று வருகிறது ; விதிகளை மீறியது தெரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்