\
“தேவைகள் அதிகமானால் பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும்”- ராஜேந்திர பாலாஜி

“தேவைகள் அதிகமானால் பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும்”- ராஜேந்திர பாலாஜி

“தேவைகள் அதிகமானால் பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும்”- ராஜேந்திர பாலாஜி
Published on

தேவைகள் அதிகமாக இருக்கும் போது பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. இந்நிலையில் தேவைகள் அதிகமாக இருக்கும் போது பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், பொறாமையால் ஆட்சிக்கு வர வேண்டு என்கிற நட்பாசையால் ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவதாக கூறினார். தினகரனே அவர் கட்சியை விட்டு வெளியே வந்துவிடுவார் என்றும் அமமுகவை விட்டு அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள் எனத் தெரிவித்தார். மாஸான லீடர் பாஸான லீடர் எப்போதும் எடப்பாடி தான் என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com