ரஜினி, கமல் சேர்ந்தாலும் அவர்களது ரசிகர்கள் சேரமாட்டார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், ரஜினி - கமல் அரசியல் பேச்சு குறித்தும் பேசினார். அதில், ’'உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயார். இதேபோல் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தயாரா? தனித்து போட்டியிட்டால் அவர்களுடைய திராணி என்னவென்று தெரியும். திமுக கூட்டணியில் தான் பிரச்னைகள் உள்ளன. அவர்கள் கூட்டணி உடையும். அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை.
அரசியலுக்கு வர ரஜினி காலதாமதப் படுத்திவிட்டார். இனி அரசியலுக்கு அவர் வந்தால் சரிவராது. ரஜினி என்ன முடிவு எடுப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தாலும் அவரது ரசிகர்கள் சேரமாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. ரஜினி கமல் ஒரு முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். அதிமுக தான் வெல்லும். இரட்டை இலை தான் ஜெயிக்கும். திருமாவளவன் எதேர்ச்சையான வார்த்தையில் தான் கோயில் குறித்து பேசி இருப்பார். அவர் வார்த்தைக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம்'' என தெரிவித்தார்