அமைச்சர் நேரு பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்த பாம்பு – காலால் மிதித்தே கொன்ற தொண்டர்!

அமைச்சர் நேரு பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்த பாம்பு – காலால் மிதித்தே கொன்ற தொண்டர்!
அமைச்சர் நேரு பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்த பாம்பு – காலால் மிதித்தே கொன்ற தொண்டர்!

திருச்சியில் அமைச்சர் நேரு பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்த பாம்பை திமுக தொண்டர் காலால் மிதித்தேக் கொன்றார்.

திருச்சி, மதுரை சாலையில், பஞ்சப்பூரில் 349.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகை பயன்பாட்டு மையம் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்காக புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்தில், சிவப்பு கார்பெட் விரித்து மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பூந்தொட்டிகளும் அழகுக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கட்டுமான பணிகளை துவக்கி வைக்க அமைச்சர் நேரு வந்தபோது, அங்கிருந்த சில பூந்தொட்டிகளை நகர்த்தி வைத்தனர்.

அப்போது ஒரு பூந்தொட்டிக்கு கீழே, இரண்டு அடி நீளத்தில் ஒரு பாம்பு சுருண்டு படுத்திருந்தது. அமைச்சர் வரும் நேரத்தில், பாம்பை கண்டு பதறிய கட்சிக்காரர் பாம்பு தலையை காலால் மிதித்துக் கொன்றார். உடனடியாக அங்கிருந்த துப்புரவு பணியாளர் அந்த பாம்பை அப்புறப்படுத்தினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com