தமிழ்நாடு
போராட்டத்தின் தொடக்கத்திலேயே ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன்
போராட்டத்தின் தொடக்கத்திலேயே ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் தொடக்கத்திலேயே விரும்பத்தகாதவர்கள் ஊடுருவி விட்டனர் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விரும்பத்தகாதவர்கள் போராட்டத்தின் தொடக்கத்திலேயே ஊடுருவி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். போராட்டங்களின்போது, காவல்துறையினர் உணர்வுபூர்வமாக செயல்படக்கூடாது எனவும், சட்டப்படிதான் நடக்கவேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.