பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பயணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது. அரசுப் பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தின் வைப்புத் தொகை கடந்த மார்ச் மாதம் வரை ரூ.53,555 கோடி ரூபாயாக உள்ளது.

இந்தத் தொகை எல்.ஐ.சி.யின் பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும், ஒன்றிய அரசின் கருவூலப் பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை தமிழக அரசு, முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த நிதி வேறு பணிக்கோ, நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அதேநடைமுறைதான் தொடரும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com