“ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்” - அமைச்சர் மூர்த்தி

“ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவனியாபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் நிரந்தர வாடிவாசல் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும்” - அமைச்சர் மூர்த்தி.
Jallikattu
Jallikattufile

செய்தியாளர்: சுபாஷ்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் போட்டியாக அவனியாபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரையில் மேயர் இந்திரா ராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், காவல் ஆணையாளர் லோகநாதன் உள்ளிட்டோர் தலைமையில் இன்று நடைபெற்றது.

Minister murthy
Minister murthypt desk

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறுகையில், “அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருடன் கலந்து ஆலோசித்து நிரந்தர அந்த இடத்தில் வாடிவாசல் அமைக்க முடிவெடுப்பார்கள்.

Jallikattu
அடங்கா காளைகளை அடக்கும் காளையர் ; தச்சங்குறிச்சியில் மதநல்லிணக்க ஜல்லிக்கட்டு!

உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுதான் வருகிறது. உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூர் மாடுகளை கொண்டு வந்து உள்ளூர் மாடுகள் என கூறுவதால் வரும் பிரச்னை இது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூர் மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்றார்.

Jallikattu
Jallikattupt desk

தொடர்ந்து அவரிடம், ‘சிறந்த மாடுகள் மாடுபிடி வீரர்கள் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதா.?’ என கேட்டதற்கு “முன்பு எப்படி இருந்ததோ அது போல்தான் இனியும் இருக்கும். மாடுபிடி வீரர்கள், காளைகள் போலியாக ஜெராக்ஸ் எடுத்து களமிறக்கும் பிரச்னை இந்த முறை நடக்காது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக முன்னின்று நடத்துவார். எந்த ஒரு தவறும் நடக்காது” என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com