\
"விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறை" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

"விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறை" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

"விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறை" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
Published on

விவசாயிகளுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளில் லஞ்சம் கேட்டால், சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய செஞ்சி மஸ்தான், வெளிப்படை தன்மையோடு திமுக ஆட்சி நடத்துவதாகக் கூறினார். மேலும், விவசாயிகளுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளில் லஞ்சம் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com