தமிழ்த் தாய்க்கு இந்த ஆண்டே சிலை: மாஃபா பாண்டியராஜன்

தமிழ்த் தாய்க்கு இந்த ஆண்டே சிலை: மாஃபா பாண்டியராஜன்
தமிழ்த் தாய்க்கு இந்த ஆண்டே சிலை: மாஃபா பாண்டியராஜன்

மதுரையில் உள்ள உலக தமிழ்ச் சங்கத்தில் தமிழ்தாய்க்கு வரும் ஆண்டில் சிலை அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, விதி 110-இன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில், அமெரிக்க சுதந்திர தேவி சிலையை போல், தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், கட்டத்திறன் ஆகியவற்றை உலகறியச் செய்யும் முயற்சியாக ரூ.100 கோடி செலவில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். 

மேலும் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி, தமிழர்களின் தொன்மை சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த்தாய் பூங்கா ஒன்றும் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்த்தாய் சிலை அமைப்பது தொடர்பான அறிவிப்பு என்ன ஆனது ? என சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், 50 கோடி ரூபாய் செலவில் உலக தமிழ் சங்க வளாகத்தில் தமிழர் தொன்மை பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும், அந்த மையத்தில் தமிழ்த்தாய் சிலை வரும் ஆண்டில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com