அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவிற்கு வருகை தந்த மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் லிப்டில் மாட்டிக்கொண்டார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், கை சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்திற்கு வருகை தந்தார். நிகழ்ச்சியின் நிறைவுக்கு பிறகு மூன்றாவது தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு வருகை தந்த அவர் லிப்டில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக லிப்டின் இயக்கம் தடைப்பட்டது.

செய்வதறியாது திகைத்து நின்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள், பின்னர் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் லிப்டின் ஆபத்துக் கால கதவின் வழியே வெளியேறினர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com