”பாஜக பிரதிநிதிபோல செயல்படுகின்றார் ஆளுநர்”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
நீட் விலக்கு கோரிக்கை மசோதாவை தமிழ்நாடு ஆளுநர், சபாநாயருக்கு திருப்பி அனுப்பியது அதிர்ச்சியளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு கோரிக்கையை முறைப்படி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். மாறாக சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி உள்ளார். இதன்மூலம் ஆளுநர் பாஜக பிரதிநிதி போல செயல்படுகின்றார். ஆளுநரின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில், நாளை தமிழக முதல்வர் தலைமையில் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தக் கட்டமாக தமிழக அரசு செயல்படும். நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக நீதிமன்றம் மூலமாக அரசு அழுத்தம் கொடுப்போம்” என்றார்.
ஏற்கெனவே நீட் தேர்வை ரத்து செய்தது தொடர்பாக ஆளுநர், உள்துறை அமைச்சர், பிரதமர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் திமுக சார்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் ராகுல் காந்தியும் நாடாளுமன்றத்திலும் இது தொடர்பான அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.